தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் வேளாண்மை பயிற்சி பெற குஜிலியம்பாறை வந்திருந்தனர். குஜிலியம்பாறை தோட்டக்கலைத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட நாகையகோட்டையில் உள்ள நெல்லிக்கனி அறக்கட்டளை நிறுவனர் சிவா மற்றும் வாழை மர விவசாயி பாலு ஆகியோர் மாணவிகளுக்கு விவசாயம் குறித்து விளக்கம் அளித்து சான்றிதழ் வழங்கினர்.