திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எம்எல்ஏவான சந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்.