சிவகங்கை: பார்சல் மோசடி - எச்சரிக்கை விடுத்த மாவட்ட காவல்துறை
உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாக கூறி மிரட்டி பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மிரட்டல் அழைப்புகளை நம்ப வேண்டாம், பணம் செலுத்த வேண்டாம். உதவிக்கு 1930-ஐ அழைக்கவும்.