நாங்குநேரி: திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் கோலாகலமாக நடந்த கருட சேவை!
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது. சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்த நிலையில், கோவிந்தா கோபாலா கோஷத்துடன் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.