அரியலூர்: அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை பாதுகாக்க கோரிக்கை: ஏஐடியுசி மாநாட்டில் தீர்மானம்
அரியலூரில் நடைபெற்ற ஏஐடியுசி 9-வது மாவட்ட மாநாட்டில், அரசு சிமெண்ட் ஆலையின் விற்பனையை அதிகரிக்கவும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.