அதிராம்பட்டினம் கீழத்தெருவில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம்… சமயோசிதமாக சிந்தித்ததால் தவிர்க்கப்பட்டு, பெரும் விபத்து தடுக்கப்பட்டது!
அதிராம்பட்டினம் கீழத்தெரு பகுதியில், வீட்டில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக செயல்பட்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமையல் எரிவாயு கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், ஏற்படவிருந்த மிகப்பெரிய தீ விபத்து மற்றும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சமயோசிதமாக செயல்பட்ட பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்!
Pattukkottai, Thanjavur | Oct 20, 2026