விருத்தாசலம்: கடைவீதியில் கஞ்சா போதையில் கடை வியாபாரிகளை தாக்கிய வாலிபர்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கடைவீதியில் கஞ்சா போதையில் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டு அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்தி இடையூறு செய்தும், பொதுமக்களை அவதூறாக பேசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விருத்தாச்சலம் போலீசார் அந்த வாலிபரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.