அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: போலீஸ் மீது அரிவாளால் தாக்குதல் - ரவுடி அதிரடி கைது
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மீது அரிவாளை வீசி கொலை செய்ய முயன்ற ரவுடி அஜய் சாரதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுசீந்திரம், அஞ்சுகிராமம் காவல் நிலையங்களில் அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.