கிண்டி: சென்னை அசோக் நகர் பள்ளியில் உயர்வுக்கு படி முகாம் தொடக்கம்
Guindy, Chennai | Sep 30, 2026 சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் 'உயர்வுக்கு படி' உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் முகாமை தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.