பழனி: வனத்துறை வாகனத்தை துரத்திய காட்டு யானை வைரல் வீடியோ பழனி பாலாறு அணை பகுதியில் பொதுமக்கள் அச்சம்#viral video
பழனியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாலாறு பொறுந்தலாறு அணைப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று பகல் நேரத்திலேயே சுற்றித்திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், ஒற்றைக் காட்டு யானை ஒன்று அணையின் முன்புறம், அணையின் அருகே உள்ள அரசு மீன் வளர்ப்பு பண்ணை மற்றும் புளியம்பட்டி செல்லும் சாலை ஆகியவற்றில் சாவகாசமாக சுற்றித்திரிவதும், சாலையில் நடுவே நின்று இருப்பதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது