தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆசிய விளையாட்டு பதக்கம் வென்ற அபிநயாவுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை அபிநயாவுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என அவர் தெரிவித்தார்.