திருவட்டாறு: திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக குளிக்கத் தடை - சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.