வேதாரண்யம்: நாகை, திருவாரூர்: 6 இலட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிப்பு - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 6 இலட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். அனுபவமற்ற அதிகாரிகளால் தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை எனவும், பயிர்கள் கருகி வருவதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.