நாகப்பட்டினம்: நாகையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்: 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
நாகப்பட்டினத்தில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 41 மாத பணி நீக்கக் காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.