ஆம்பூர்: திருப்பத்தூர்: காரப்பட்டு நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் காரப்பட்டு நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசியப் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் விற்பனை முனையக் கருவியின் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.