பழனி: முகாமிற்குள் புகுந்த மழைநீர் - 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியது
பழனி புளியம்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இடுப்பளவுக்கு நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்படுகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையால் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதே காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.