ஆவுடையார் கோவில்: முத்துகுடா ECR சாலையில் ஸ்ரீ ஈச்ச மரத்து காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துகுடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஈச்சமரத்து காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி போட்டிகள் இசிஆர் சாலையில் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விடா குழுவினர் ரொக்க பரிசு வெற்றிக்கோப்பைகளை வழங்கினர்.