மருங்கபுரி: தளவாய்பட்டியில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு பணம் மற்றும் சுமார் 20 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே தளவாய்பட்டியில் வசித்து வருபவர் மகாலிங்கம் 73. இவரது மனைவி கமலவேணி 60. இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்த போது வெளியில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு மகாலிங்கம் வெளியே வந்து பார்த்த போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர் மகாலிங்கத்தை கட்டி வீட்டிற்குள் தூக்கிச் சென்று கமலவேணியையும் கட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்