இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
ராமநாதபுரத்தில் 174 மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட பணிகளுக்கு பெண்கள் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்த இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.