உடையார்பாளையம்: அரியலூர் ஜெயங்கொண்டத்தில் 8வது டாஸ்மாக் கடை மூடும் போராட்டம்
அரியலூர் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் பொதுமக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்குப்பின், அதிகாரிகள் இன்று டாஸ்மாக் கடையை மூடினர். இது ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் எட்டாவது கடை மூடல். மேலும் காலையில் இதற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் போராட்டம் செய்தனர்.