காளையார்கோவில்: அரண்மனை சிறுவயலில் இறப்பு சடங்கில் தகராறு- மூன்று பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலை சேர்ந்த இளையராஜா,குணசேகரன் தாயார் கடந்த பிப்-23-ம் தேதி இறந்துவிட்டார், அவரது மூன்றாம் நாள் சடங்கிற்கு குணசேகரன் மனைவி மஞ்சுளா வந்தபோது உயிரோடு இருக்கும் போது தங்களது தாயாரை சேர்ந்த பராமரிக்கவில்லை என்பதை மனதில் கொண்ட இளையராஜா,தேவி,கண்ணன் ஒன்று சேர்ந்து தகராறில் ஈடுபட்டு குணசேகரன்,மஞ்சுளாவை ஆபாசமாக பேசி கையால் தாக்கியுள்ளனர், இது குறித்து கல்லல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்