தூத்துக்குடி: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் நேரில் மனு பெற்ற ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், ஆட்சியர் விஷூ மகாஜன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.