எழும்பூர்: கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு - விவரம் இதோ!
Egmore, Chennai | Oct 20, 2026 ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி மற்றும் ரோஜா தலா 250 ரூபாய்க்கும், மல்லிகை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.