கோவில்பட்டி: விஸ்வநாத தாஸ் நகரில் புதிய கலையரங்கம் திறப்பு விழா எம்எல்ஏ திறந்து வைத்தார்
கோவில்பட்டி அருகே விஸ்வநாததாஸ் நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.