ஆவுடையார் கோவில்: ஈச்சங்குடி கிராமத்தில் ஊர் பொதுமக்களால் நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிகள் நடைபெற்றன
தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டி,வடமாடு போட்டி,மஞ்சுவிரட்டு போட்டி,குதிரை மற்றும் மாட்டு வண்டி போட்டிகள்,புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஈச்சங்குடி கிராமத்தின் கோவில் மாசி மக உற்சவ திருவிழாவை முன்னிட்டு கிராம மக்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பந்தய போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை ஓரத்தில் இன்று கண்டு ரசிதனர்.