திருப்பூர் தெற்கு: திருப்பூர்: உள்ளாட்சி ஊழியர்கள் 2,500 பேர் வேலைநிறுத்தம் - அத்தியாவசியப் பணிகள் பாதிப்பு
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூய்மை மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் முடங்கியுள்ளன.