விருத்தாசலம்: முதல்வர் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் - அமைச்சர் அறிக்கை
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மார்ச் 2,3,4ல் விருத்தாசலம், பண்ரூட்டி, திட்டக்குட்டி, நெய்வேலி நெல்லிக்குப்பம் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில் திரளான திமுக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டுமென கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.