வேதாரண்யம்: நாகை: தண்ணீர் வராததால் கருகும் சம்பா பயிர்கள்; கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை - மணக்காடு ஊராட்சியில், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததை கண்டித்து கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். 400 ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் கருகி வருவதால் அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.