திருப்பூர் தெற்கு: திருப்பூர்: கோயில் நில விவகாரத்தில் பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மோதல்!
திருப்பூர் பள்ளக்காட்டுப்புதூரில், கோயில் நிலத்தில் மரக்கன்றுகள் நட வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் உள்ள நிலையில் அதிகாரிகள் அவசரம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.