தென்காசி: 15 வருஷமாக கும்பாபிஷேகம் இல்லை! வாசுதேவநல்லூர் கோயில்களில் அதிகாரிகள் அலட்சியம்!
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் மாரியம்மன் கோயில்களில் கடந்த 15 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாததால் பக்தர்கள் கடும் அதிருப்தி. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை.