போடிநாயக்கனூர்: கேரள கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: போடிமெட்டில் பரபரப்பு
கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் மனிதக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை தேனி மாவட்டத்தின் போடிமெட்டு பகுதியில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். சோதனைச் சாவடியில் காவலர்கள் வழக்கு பதிவு செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.