பெரம்பலூர்: தீரன் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு வருடாபிஷேகம் விழா
பெரம்பலூர் தீரன் நகரில் உள்ள ஸ்ரீ மதுரம் சீரடி சாய்பாபா ஆலயம், இந்த ஆலயத்தில் 10ம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது, பெரம்பலூர் சிவன் கோவில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து மேளதாளம், தப்பாட்டம் வான வெடியுடன் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று அங்கு பக்தர்கள் எடுத்துச் சென்ற பாலில் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.