தென்காசி: மாயமான 80 வயது மூதாட்டி: காட்டுப்பகுதியில் பிணமாக மீட்பு - கொலையா?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான மூதாட்டி, மேலகலங்கல் காட்டுப்பகுதியில் உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.