வேலூர்: குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்கம்
வேலூர் மாவட்டத்தில் 91,791 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை அங்கன்வாடி மற்றும் சுகாதார மையங்களில் இந்த முகாம் நடைபெறும் என ஆட்சியர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.