பாலக்கோடு: பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை கல்லூரி பட்டமளிப்பு விழா: 701 மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கல்லூரியின் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 15 துறைகளைச் சேர்ந்த 701 மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத்தலைவர் டாக்டர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.