பெரம்பலூர்: பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர்கள் சம்மேளனம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டத்திருத்தம் 2025-ஐ திரும்பப் பெறவும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இதில் பங்கேற்றனர்.