அரியலூர்: அரியலூரில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத சுகாதார வளாகம்: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
அரியலூர் கீழகாங்கியனூர் கிராமத்தில் ரூ.5.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடப்பதால், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.