உடுமலைபேட்டை: திருப்பூர் அமணலிங்கேஸ்வரர் கோயில் நடை திறப்பு: பஞ்சலிங்க அருவிக்கு இன்று தடை!
திருப்பூர் பாலாற்றில் வெள்ளம் வடிந்ததால் அமணலிங்கேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து சீராக இல்லாததால், பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.