நாகப்பட்டினம்: நாகை: பெய்த சிறிய மழைக்கே குண்டும் குழியுமான சாலைகள்; பொதுமக்கள் கடும் அவதி!
நாகப்பட்டினத்தில் பெய்த மழையினால் அந்தோணியார்கோவில் மெயின் ரோடு மற்றும் கடற்கரை சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், சாலைகளை உடனே சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.