தூத்துக்குடி: பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் இன்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.