இராமநாதபுரம்: பரமக்குடி: உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்
பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி. கண்ணகி அவர்களின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ் அவர்கள் இன்று நேரில் வழங்கினார்.