ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது மாணவன் மாயம் - போலீசார் விசாரணை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் டியூஷன் செல்வதாக சென்ற 12 வயது சிறுவன் மாயமாகியுள்ளார். சிசிடிவி காட்சியில் சிறுவன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிச் செல்வது பதிவாகியுள்ள நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.