ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டியில் மாட்டு கொட்டகையில் வசிக்கும் அனாதை பிள்ளைகள்: முதல்வர் விஜய் உதவ கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெற்றோர் இன்றி தவிக்கும் மூன்று பிள்ளைகள், வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தவர்கள் பாதியில் கைவிட்டதால் மாட்டு கொட்டகையில் வசிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் உதவ வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.