கிருஷ்ணகிரி: அக். 26 முதல் குழந்தைகளுக்கு வைட்டமின்-A திரவம் வழங்கும் முகாம்
கிருஷ்ணகிரியில் அக். 26 முதல் 31 வரை 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 1.28 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.