கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து நாசம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கில் புதூர் பகுதியில் கனமழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்ததால் விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர். ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.