திருவாடனை: இலங்கைக்கு 24 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற நபர்களை சாதுரியமாக எஸ்.பி பட்டினத்தில் கைது செய்த போலீஸ்
எஸ்பி பட்டினம் அடுத்த தீர்தண்டதானம் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மீமிசல் பகுதியைச் சேர்ந்த மாது(31), தொண்டி புதுப்குடியைச் சேர்ந்த சமயக்கண்ணு (24) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 12 பொட்டலங்களில் 24 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து இருவரையும் கைது செய்த எஸ்பி பட்டினம் போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.