அரியலூர்: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 499 மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 499 மனுக்களை ஆட்சியர் திருமதி ந.மிருணாளினி பெற்றுக்கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.