வேடசந்தூர்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு
வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம் பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவை ஏற்று ஒரு வாரமாக புதியதாக கல்லூரியில் இணைந்த மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடைசி நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதில் கல்லூரிக்கு பேருந்து வசதி மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எம்பி இடம் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.