பழனி: பழனியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
ஒடிசாவிலிருந்து பழனிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த கில்சன், தர்ஷன், ஜான்சன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.