பழனி: கோட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி!
பழனி அருகே சித்தமருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 1988ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதில் பழனிசாமி என்பவரின் 7 ஏக்கர் நிலத்திற்கு தகுந்த இழப்பீடு கேட்டு தொடுத்த வழக்கில் 1 கோடியே 3 லட்சத்து 19,653 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இழப்பீடு வழாங்கத்தால் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.